
T20 WC 2021 2nd Match: Scotland seal a fantastic six-run win aginst Bangladesh (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கிறிஸ் கிரீவ்ஸின் சிறப்பான அட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.