
T20 WC 2021 4th Match: Namibia bowledout by 96 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் 4ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணி தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் சற்று நிலைத்து விளையாடிய கிரேக் வில்லியம்ஸ் 29 ரன்னிலும், கேப்டன் எராஸ்மஸ் 20 ரன்களையும் சேர்த்தார். ஆனால் அவர்களைத் தவிற மற்ற வீரர்கள் சரிவர சோபிக்காததால் அந்த அணி 19.3 ஓவர்கலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தனர்.