
T20 WC 2021 7th Match: Namibia register their first ever T20 WC match (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி மேக்ஸ் ஓடவுட்டின் அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக் ஓடவுட் 70 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய நமீபியா அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் எரஸ்மஸ் - டேவிட் வைஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.