டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா, நிஷங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா, தினேஷ் சண்டிமல், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
இதையடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - வாநிந்து ஹசரங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
அதன்பின் 71 ரன்களில் ஹசரங்கா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்க்ஷ ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 71 ரன்களையும், பதும் நிஷங்கா 61 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now