
T20 WC 21st Match: Scotland Finishes off 109 runs in their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் ஜார்ஜ் முன்சி, மெக்லொய்ட், பெர்ரிங்டன், வல்லெஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கிறிஸ் கிரீவ்ஸ் - மைக்கேல் லீஸ்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் மைக்கேல் லீஸ்க் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.