
T20 WC 22nd Match: Warner back into the form, Aus beat Sl by 7 wickets (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசல் பெரேரா, சரித் அசலங்கா தலா 35 ரன்களைச் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைபற்றி அசத்தினர்.