
T20 WC 23rd Match: West Indies won the thrilling match! (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது நிதான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 39 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான், சொரிஃபுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.