
T20 WC 25th Match: Nissanka Takes Sri Lanka To 142/10 Against South Africa (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 25ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா, சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பதும் நிஷங்கா அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 72 ரன்களில் நிஷங்காவும் பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.