
T20 WC 26th Match: Jos Buttler Powers England To Easy Win Against Rivals Australia (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 44 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.