Advertisement

டி20 உலகக்கோப்பை: தென் ஆபிரிக்க பந்துவீச்சில் 84 ரன்னில் சுருண்டது வங்கதேசம்!

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 84 ரன்களில் ஆட்டமிழந்தது.

Advertisement
T20 WC 30th Match: Rabada & Nortje Rain Fire On Bangladesh As South Africa Restrict Them To 84
T20 WC 30th Match: Rabada & Nortje Rain Fire On Bangladesh As South Africa Restrict Them To 84 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 02, 2021 • 05:25 PM

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 02, 2021 • 05:25 PM

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முகமது நைம் 9 ரன்னிலும், அடுத்து வந்த சௌமியா சர்கார், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். 

Trending

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: T20 World Cup 2021

இதனால் 18.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement