
T20 WC 30th Match: South Africa Brush Asides Fragile Bangladesh (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்திலேயே டி காக் 16, ஹெண்ட்ரிக்ஸ் 4, டுசென் 22, மார்க்ரம் 0 என விக்கெட்டுகளை இழந்தது.