
T20 WC 32nd Match: NeZealand register their second won in this season (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்தில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய மிட்செல், வில்லியம்சன், கான்வே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கப்தில் 93 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது.