
T20 WC 33rd Match: India beat Afghanistan by 66 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 210 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 74 ரன்களையும், கேஎல் ராகுல் 69 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது.