
T20 WC 34th Match: Bangladesh bowled out by 73 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் அந்த அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தடுமாறியது.
அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா பந்துவீச்சை எதிகொள்ள முடியாமல் வங்கதேச அணி வீரர்கள் திணறினர். இதனல் 15 ஓவர்களிலேயே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களை மட்டுமே சேர்த்தது.