
T20 WC 35th Match: Nissanka, Asalanga's fities helps Sri Lanka post a total on 189 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இதில் பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையிலிருந்து நிஷங்கா அரைசதம் அடித்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததோடு அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். பின் 68 ரன்கள் அடித்திருந்த அசலங்கா ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.