
T20 WC 36th Match: New Zealand Set a target on 164 against Namibia (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியினர் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்டின் கப்தில் 18 ரன்னிலும், டேரில் மிட்செல் 19 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 28 ரன்னிலும், டேவன் கான்வே 17 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - ஜேம்ஸ் நீஷம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.