Advertisement

டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
T20 WC 37th Match: India beat Scotland by 8 wickets
T20 WC 37th Match: India beat Scotland by 8 wickets (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 05, 2021 • 09:48 PM

டி20 உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசதீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 05, 2021 • 09:48 PM

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி ஜடேஜா, ஷமி ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 17.4 ஓவர்களிலேயே அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்தது.

Trending

இதில் இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா இணை முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசி ஸ்காட்லாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். 

இதில் 30 ரன்களை சேர்த்திருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Also Read: T20 World Cup 2021

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஆஃப்கானிஸ்தானை புள்ளிப்பட்டியலில் முந்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement