
T20 WC 37th Match: Scotland bowled out by 85 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதேலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதிலும் அந்த அணியில் ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க் ஆகியோரைத் தவிர வேறு யாரும் 20 ரன்களைக் கூட கடக்கவில்லை.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஸ்காட்லாந்திற்கு நெருக்கடியளித்தனர்.