
Curtis Campher Does A 4 In 4 As helps Ireland to comfortable win (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இதில் கர்டிஸ் கேமபரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 51 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.