
T20 WC 41st Match: Pakistan finishes off 189 of their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் விளையாயி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வேன் 15 ரன்னிலும், ஃபகர் ஸமான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசம் - முகமது ஹபீஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஹபீஸ் 31 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் பாபர் ஆசாம் அரைசதம் கடந்து அசத்தினார்.