Advertisement

இங்கிலாந்தை வீழ்த்திய் சாதிக்குமா நியூசிலாந்து - உத்தேச அணி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan November 10, 2021 • 11:39 AM
T20 WC: England aren't strong favourites for semi-final against New Zealand
T20 WC: England aren't strong favourites for semi-final against New Zealand (Image Source: Google)
Advertisement

ஏழாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சூப்பர்-12’ சுற்று முடிவில் ‘குரூப்-1’-ல் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ‘குரூப்-2’-ல் முதல் இரு இடங்களை தனதாக்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

இந்த நிலையில் அபுதாபியில் இன்று இரவு நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

Trending


முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி ‘சூப்பர்-12’ சுற்று லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை அடுத்தடுத்து பந்தாடியது. கடைசி லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது. 

அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 20 ரன்னில் இருக்கையில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஜாசன் ராய் தொடரில் இருந்து விலகினார். அவர் விளையாட முடியாதது இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவாகும். 

அவருக்கு மாற்று வீரராக ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டாலும், அவருக்கு ஆட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் மிடில் வரிசையில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக ஜானி பேர்ஸ்டோவ் களம் இறங்குகிறார்.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், டேவிட் மலான், லிவிங்ஸ்டன், பேர்ஸ்டோவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷித் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆல்-ரவுண்டராக மொயீன் அலி அசத்துகிறார்.

நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் பணிந்தது. அடுத்த ஆட்டங்களில் இந்தியா, ஸ்காட்லாந்து, நமிபியா, ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டிவான் கான்வே ஆகியோர் ஜொலித்து வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் மிரட்டுகிறார்கள்.

முன்னதாக 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிவில் ‘டை’யில் முடிந்த போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அதற்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

உத்தேச அணி

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் மலான், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஈயான் மோர்கன் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.

Also Read: T20 World Cup 2021

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவன் கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement