Advertisement

டி20 உலகக்கோப்பை: எந்த அணி கோப்பையை வெல்லும்? ஷேன் வார்னேவின் பதில்!

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 13, 2021 • 16:26 PM
T20 WC Final: New Zealand Or Australia? Who Is Shane Warne's Pick To Win Title In Dubai?
T20 WC Final: New Zealand Or Australia? Who Is Shane Warne's Pick To Win Title In Dubai? (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

அரையிறுதிக்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 வலுவான அணிகள் முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்தும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன.

Trending


இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும். 

இந்நிலையில், நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தான் கோப்பையை வெல்லும் என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். 

Also Read: T20 World Cup 2021

இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 19வது ஓவரில் 22 ரன்களை குவித்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, அதே உத்வேகத்துடன் நன்றாக இருப்பதால், இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement
Advertisement