
T20 WC: Have tried to learn and grow throughout tournament, says Williamson (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடக்கிறது. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும் வேட்கையில் இருப்பதாலும் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்தீப்பில் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், “நாங்கள் ஒரு அற்புதமான அரையிறுதியைப் பார்த்தோம். இரண்டு அரையிறுதிகளும் உண்மையில் ஓரளவு ஒத்திருந்தன. தொடரின் முடிவை எதிர்பார்க்கும் தருணங்களில் சில முக்கிய நிகழ்வுகளை நாம் கொண்டிருக்கிறோம்.