இந்தியாவுக்கு எதிராக நாங்கள் தான் வெல்வோம் - பாபர் ஆசாம் நம்பிக்கை!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் மிகத்தீவிரமாக விளையாடுவார்கள். கிரிக்கெட்டில் எதிரி அணிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்கின்றன.
இரு அணிகளும் இருதரப்பு அல்லது முத்தரப்பு தொடர்களில் எல்லாம் ஆடுவதில்லை. எனவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ஐசிசி தொடர்களில் மட்டுமே பார்க்கமுடியும்.
Trending
உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதேயில்லை. ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என எந்தவிதமான உலக கோப்பை தொடரிலும் இந்தியாவை ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை என்ற மோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி வைத்துள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு டி20 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 12 பிரிவில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், வரும் 24ஆம் தேதி நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான வின்னிங் ரெக்கார்டை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இந்திய அணியும், அந்த ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்நிலையில், இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், “ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் 3-4 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவருகிறோம். அதனால் அமீரக கண்டிஷன் எங்களுக்கு நன்கு பழக்கப்பட்டது. அமீரகத்தில் ஆடுகளங்கள் எப்படி இருக்கும், பேட்ஸ்மேன்கள் அதற்கேற்றவாறு எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் வீரர்களுக்கு தெரியும். அந்த குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அந்த அணி தான் வெல்லும். என்னை கேட்டால், நாங்கள் தான் வெற்றிபெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now