
T20 WC: Ishan Kishan missed out from playing xi (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகிய மூவரும் துவக்க வீரர்களாக இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக தொடக்க வீரர்களுக்கான இடத்தில் நல்ல போட்டி நிலவுகிறது. எது எப்படி இருப்பினும் அனுபவ வீரர்களான ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரே தொடக்க வீரராக களமிறங்குவார்கள். இதன் காரணமாக இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் போகும்.