
T20 WC: Robel Hossain replaces injured Mohammad Saifuddin in Bangladesh squad (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது.
மேலும் முகமது சைஃபுதின் விலகியதையடுத்து அவருக்கு மாற்று வீரராக ரூபெல் உசைன் வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.