டி20 உலகக்கோப்பை அரையிறுதி: ரிஸ்வான், ஸமான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 39 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினர். பின் 67 ரன்னில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து ஃபகர் ஸமானும் அரைசதம் கடந்து அசத்தினார்.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிஸ்வான் 67 ரன்களையும், ஃபகர் ஸமான் 55 ரன்களையும் சேர்த்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now