
T20 WC: There are lot of challenges in front of New Zealand, says Williamson (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வில்லியம்சன், “இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் முன்னேற நிறைய சவால்கள் உள்ளன. அதாவது உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் ஓவ்வொரு அணியிலும் போட்டி வெற்றியாளர்கல் உள்ளன.