
T20 WC Warmup Match: England Post 163/6 Against New Zealand In First Innings (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோரை யும் உயர்த்தினர்.
அவருக்கு உதவியாக ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் 27 ரன்களையும் சேர்த்தனர். இதமூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.