Advertisement

ஹசன் அலியின் கேட்ச் ஆட்டத்தை மாற்றிவிட்டது - பாபர் ஆசாம்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மனம் திறந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 12, 2021 • 12:40 PM
T20 WC: Way we gelled and played entire tournament, I'm satisfied as captain, says Babar Azam
T20 WC: Way we gelled and played entire tournament, I'm satisfied as captain, says Babar Azam (Image Source: Google)
Advertisement

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய வேளையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் முக்கியமான 2ஆவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்லது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

Trending


இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன், “நாங்கள் முதல் இன்னிங்சின் போது பெரிய ரன்களை குவிக்க நினைத்தோம். அதன்படி இந்த போட்டியில் வெற்றி பெற தேவையான ரன்களை நாங்கள் குவித்தோம். இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை இறுதிவரை விளையாட வைப்பது பெரிய மாற்றத்தை தந்தது.

அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது யாதெனில் ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் தான். அதை மட்டும் நாங்கள் சரியாக பிடித்திருந்தால் இந்த போட்டியின் முடிவு மாறி இருக்கும். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக நான் இந்த தொடரில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்த தொடரில் நாங்கள் செய்த சில தவறுகளை திருத்திக் கொண்டு இனிவரும் இது போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவோம்.

Also Read: T20 World Cup 2021

இதுபோன்ற முக்கியமான போட்டியில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த போட்டியின் மூலம் தெரிந்து கொண்டுள்ளோம். இந்த மைதானத்தில் எங்களுக்கு கிடைத்த ஆதரவு சிறப்பாக இருந்தது” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement