
T20 WC won't be easier just because Pakistan defeated India: Babar Azam (Image Source: Google)
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
கடந்த 1992ஆம் ஆண்டு சிட்னியில் விளையாடியதிலிருந்து 50 ஓவர்கள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்திருந்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை வென்று தனது தாகத்தை தீர்த்துக் கொண்டது.
இந்நிலையில் வெற்றிக்குப்பின் பேசிய பாபர் ஆசாம்“”அணி வீரர்களை, இந்த வெற்றி அணியில் உள்ள எந்த தனிஒரு வீரரால் கிடைக்கவில்லை. நாம் முழுமையாக போராடியதால், சிறப்பாகச் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி. இதை இப்படியே விட்டுவிட்டு செல்லக்கூடாது.