Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஸ்காட்லாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச அணி!

டி20 உலகக்கோப்பை: துபாயில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
T20 World Cup 2021, IND vs SCO Preview: India Face Scotland, Eye Another Big Win
T20 World Cup 2021, IND vs SCO Preview: India Face Scotland, Eye Another Big Win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 05, 2021 • 11:46 AM

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 05, 2021 • 11:46 AM

இதில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Trending

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் படுதோல்வியைச் சந்திருந்தது. 

ஆனால் அத்தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

மேலும் இனிவரும் போட்டிகளில் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதி குறித்து நினைக்க முடியும் என்பதால், இன்று நடைபெறும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோஹித், ராகுல், ஹர்திக், ரிஷப் பந்த் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது நம்பிக்கையளிக்கும் ஒன்றாக உள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் அஸ்வின், பும்ரா இருப்பது எதிரணிக்கு நிச்சயம் சவாலாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

அதேபோல் ஸ்காட்லாந்து அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதனால் அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச அணி

இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கே), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

Also Read: T20 World Cup 2021

ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீஃப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement