
T20 World Cup 2021: Scotland’s Matthew Cross Motivates Chris Greaves With ‘Whole of India Behind You (Image Source: Google)
துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து. மிகவும் நெருக்கடியாகச் சென்ற ஆட்டத்தில் கடைசி நேரத்தில் வெற்றியைக் கோட்டைவிட்டது ஸ்காட்லாந்து.
இந்த ஆட்டம் ஸ்காட்லாந்துக்கும், நியூஸிலாந்துக்கும் முக்கியமானதோ இல்லையோ இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி மட்டும் தோல்வி அடைந்திருந்தால், இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.
ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணியை நல்ல ரன் ரேட்டில் இந்திய அணி வென்றுவிட்டதால், அடுத்துவரும் 2 போட்டிகளையும் நல்ல ரன் ரேட்டில் வென்று அரையிறுதிக்குள் செல்ல முடியும்.