டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்!
இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ள சுவராஸ்யம் நடந்துள்ளது.
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
Trending
இதில் 50 பந்துகளில் 77 ரன்கள்(4சிக்ஸர்,6பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்ஷெல் மார்ஷுக்கு ஆட்டநாயகன் விருதும், டேவிட் வார்னருக்கு(53, 38 பந்துகள் 3சிக்ஸர், 4பவுண்டரி) தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் நடந்தசில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்
இதுவரை நடந்த 7 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் 6 முறை டாஸ் வென்ற அணியே வென்றுள்ளது. துபாயில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 10 ஆட்டங்கள் நடந்துள்ளன, இதில் சேஸிங் செய்த அணியே வென்றுள்ளது, அதில் 9 முறை டாஸ் வென்ற அணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
173 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்தது என்பது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட 2ஆவது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு முத்தரப்பு தொடரில் 184 ரன்களை பாகிஸ்தான் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக, 160 ரன்களுக்கு மேல் அடித்தவகையில் கடந்த 2016ஆம் ஆண்டு டி20இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 31 பந்துகளில் அரைசதம் அடித்து ஆஸி. வீரர் மிட்ஷெல் மார்ஷ் வேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். கேன் வில்லியம்ஸன் 32 பந்துகளில் அரைசதம் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார். இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜோ ரூட், 2014ஆம் ஆண்டு குமார சங்கக்கரா ஆகிய இருவரும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தனர்.
நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 85 ரன்கள் சேர்த்து இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சாதனையை சமன் செய்தார். 2016ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சாமுவேல்ஸ் 85 ரன்கள் சேர்த்தார்.
மிட்ஷெல் ஸ்டார்க் ஓவரில் வில்லியம்ஸன் மட்டும் 39 ரன்கள் சேர்த்தார். டி20 போட்டியி்ல் இதுவரை எந்த பந்துவீச்சாளர் ஓவரிலும் இதுபோல் ரன்களை எந்த பேட்ஸ்மேனும் அடித்ததில்லை. இதற்கு முன் 2011 டி20 சாம்பியன்ஸ் லீக்கில் 11 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார்.
டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 289 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்த மேத்யூ ஹேடன்(2007), பீட்டர்ஸன்(2010), ஆகியோரின் சாதனையை வார்னர் முறியடித்துவிட்டார். இதுவரை உலகக் கோப்பையில் கோப்பையை வென்ற அணியிலிருந்து ஒருவர் முதல்முறையாக தொடர்நாயகன் விருது வென்றுள்ளார் என்றால் அது வார்னர் மட்டும்தான்
2021ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் மிட்ஷெல் மார்ஷ் 627 ரன்கள் குவித்து காலண்டர் ஆண்டில் அதிகரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில 3ஆவது வீரராக உள்ளார். முதலாவதாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்(1033), பாபர் ஆஸம்(826) ரன்கள் குவித்துள்ளனர்
Also Read: T20 World Cup 2021
ஆஸி வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் 4ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கி டி20 போட்டிகளில் அதிகமான ரன்களை வழங்கிய 2-வது வீரர் என்ற பெயரெடுத்தார். இதற்கு முன் 2018ம்ஆண்டில் ஆன்ட்ரூ டை நியூஸிலாந்துக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 68 ரன்கள் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது.
Win Big, Make Your Cricket Tales Now