
T20 World Cup 2021 warm-up schedule: India to take on England and Australia on Oct 18, 20 (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக டி20 உலகக் கோப்பை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றில் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்திய அணி அக்டோபர் 18 அன்று இங்கிலாந்தையும் அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.