
T20 World Cup 2022: Buttler, Hales fifty helps England set a target of 180 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றுவரும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹோல்ஸ் இணை களமிறங்கியது. இதில் ஹேல்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் வழக்கத்திற்கு மாறாக ஜோஸ் பட்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 39 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, அடுத்த பந்திலேயே 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.