Advertisement

இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 08, 2022 • 10:16 AM
T20 World Cup 2022: Rishabh Pant Can Bring X-Factor Angle Into The Semifinal, Says Ravi Shastri
T20 World Cup 2022: Rishabh Pant Can Bring X-Factor Angle Into The Semifinal, Says Ravi Shastri (Image Source: Google)
Advertisement

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.

இந்நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் களம் இறங்க வேண்டும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

Trending


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில், “தினேஷ் கார்த்திக் அருமையான வீரர் தான். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க வலுவான இடக்கை பேட்ஸ்மேன் அவசியமாகும். அத்தகைய பேட்ஸ்மேனால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதிபோட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை களம் இறக்க வேண்டும். சமீபகாலங்களில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக நன்றாக ஆடியிருக்கிறார். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட அடிலெய்டு மைதானத்தில் அவர் நமது அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்” என்று அவர் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக பந்த் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement