
சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்து விட்டது. முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.
இந்த உலககோப்பையில் மிகவும் அதிகம் எதிர்பாக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது. உலககோப்பை தொடரில்தான் இந்த இரு நேரடியாக கிரிக்கெட்டில் மோதிக்கொள்கின்றன.
இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில் இந்த ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்துவதில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து கூறியுள்ளார்.