
T20 World Cup: Brian Lara Predicts Pakistan vs Australia Semifinal Winner (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 14ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த அணி அல்ல என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.