டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம்!
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ள நிலையில் முதல் முறையாக எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏழாவது வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்று முடிவில் குரூப்-1 பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குரூப்-2 பிரிவில் முதல் இரு இடங்களை தனதாக்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
Trending
அதேபோல் துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியும் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தாணை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை டெரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கேன் வில்லியம்சன் என அதிரடி பேட்டிங் வரிசையும், போல்ட், சௌதி, மில்னே என வேகப்பந்துவீச்சாளர்களையும் கொண்டு பலமான அணியாக திகழ்கிறது.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தானுடனான போட்டியில் அபாரமாக செயல்பட்டு இறுதிக்கு முன்னேறியுள்ளது. வார்னர், மேதியூ வேட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் இருப்பதால் நிச்சயம் அந்த அணி எதிரணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நாளை மறுநாள் துபாயில் நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read: T20 World Cup 2021
மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடி, அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றுள்ளது. இதனால் நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி பழிதீர்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now