டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்குள் நுழைவதில் இந்திய அணிக்கு சிக்கல்!
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களும் பிராத்திக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூப்பர் 12-சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தலா 5 போட்டியில் விளையாடும் படி அட்டவணை உள்ளது. அதன்படி குரூப் ஏ-வில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றன.
Trending
குரூப் பி-யில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இதில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் குறைந்தது மூன்று போட்டிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே தற்போது பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே மீதியுள்ளன. அதில் நியூசிலாந்தை தவிர்த்து நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை இந்திய அணி எளிதில் வீழ்த்தினாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை தவற விட வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய அணியை வீழ்த்தி மீதமுள்ள மூன்று அணிகளும் வீழ்த்தும் வேளையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இறுதியில் இந்திய அணி வெளியேறவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now