Advertisement
Advertisement
Advertisement

டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 16, 2021 • 14:53 PM
T20 World Cup On Mind, Pakistan, West Indies Swapped A Test For Two T20is
T20 World Cup On Mind, Pakistan, West Indies Swapped A Test For Two T20is (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் 15 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளையாடவுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பதிலாக, மேலும் இரண்டு டி20 போட்டிகளை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளது. 

Trending


இது குறித்து வெளியான அறிவிப்பில்,“நடப்பாண்டில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு தயாராகும் முனைப்பில் இருந்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற இருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், ஒன்ரை ரத்து செய்து மேலும் இரண்டு டி20 போட்டிகளை நடத்த உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி, 7 டி20, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement