டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்செய்தது.
அதன்படி அந்த அணிக்கு ஐடன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது.
Trending
இதில் அதிகபட்சமாக் ஐடன் மார்க்ரம் 48 ரன்களையும், பவுமா 31 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 34 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now