
T20 world cup will be moved on UAE (Image Source: Google)
கரோனா பரவல் கோரத்தாண்டவத்தால் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் கரோனா பரவல் 3ஆவது அலை வீச வாய்ப்புள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் இந்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்தவும் ஐசிசிஐ திட்டமிட்டிருந்தது.
ஆனால் தற்போது கரோனா வைரஸ் 3ஆவது அலை வர வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.