
Tallawahs clinch rain-hit nail-biter against Barbados Royals (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - ஜமைக்கா தலாவஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தலாவஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தாது. அதன்படி களமிறங்கிய பார்போடாஸ் ராயல்ஸ் அணியில் கார்ன்வெல், கைல் மேயர்ஸ், கார்பின் போஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து களமிறங்கிய குயிண்டன் டி காக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 74 ரன்களையும்ச் சேர்த்து அசத்தினார்.