
Tamil Actor Ajith Fans Reach 'Valimai Update' too WTC final (Image Source: Google)
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு அடிக்கடி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பீல்டிங் செய்துகொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம் ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டது சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
இதனால், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.