விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலிற்கு அபராதம் விதித்தது ஐசிசி.
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால், மைதானத்தில் ஆபாசமான வார்த்தைகளை பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கிலும் பதிவானது.
Trending
இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதி 2.3 படி குற்றமாகும். இதையடுத்து வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 15 விழுக்காடு ஊதியத்தை அபராதமாக விதிப்பதாக ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் தமிம் இக்பால் மீது எழுந்த முதல் குற்றச்சாட்டு என்பதால், அவருக்கு தடை விதிப்பதை ஐசிசி தவிர்த்த தாகவும் தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now