
Tamim ruled out from New Zealand tour with thumb injury (Image Source: Google)
வங்கதேச அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
மேலும் இந்த இரு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சேர்க்கப்படும். அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 1ஆம் தேதி ஓவலிலும், இரண்டாவது டெஸ்ட் ஜனவரி 9ஆம் தேதி கிறிஸ்ட்சர்சிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியின் நட்சத்திர தொடக்க வீரர் தமிம் இக்பால், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.