Advertisement

NZ vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து.

நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement
Taylor signs off with winning catch as New Zealand whitewash Netherlands
Taylor signs off with winning catch as New Zealand whitewash Netherlands (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 04, 2022 • 04:19 PM

நியூசிலாந்து-நெதர்லாந்து அணிகள் மோதிய 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 333 ரன்கள் எடுத்தது. வில் யங் 120 ரன்களும் கப்தில் 106 ரன்களும் எடுத்திருந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 04, 2022 • 04:19 PM

இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியினர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்டீபன் மைபர்க் மட்டுமே சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த போட்டியுடன் நியூசிலாந்து அணி வீரர் ரோஸ் டெய்லர் ஓய்வு பெறுகிறார். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வில் யங் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement