
Team India Bowlers Shine; Restrict Zimbabwe To 189 In 1st ODI (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ள தீபக் சஹார் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் இன்னொசண்ட் கையா, மருமணி, வெஸ்லி மதவெரே ஆகியோர் தீபக் சஹார் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.